வாழ்வதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம்

வாழ்வதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம்
Updated on
1 min read

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நாட்டில் 111 நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆய்வுசெய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோவை, வடோதரா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பரேலி, தன்பாத், நகர் ஆகிய நகரங்கள் கடைசி இடத்தில் உள்ளன.

10 லட்சத்துக்குள் மக்கள் வசிக்கும் நகரங்களில் சிம்லா முதலிடத்திலும் புவனேஸ்வர் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிஹாரின் முசாபர்பூர் கடைசி இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in