Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

பாஜகவின் கேரள முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் தேர்வு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ மேன்’ தரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மெட்ரோமேன் எனப் பரவலாக அறியப்பட்ட 88 வயதாகும் தரன் இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பிரபலமான நபர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரியில் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகவும் தேர்தலில் களம் இறங்கப்போவதாகவும் கூறி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அப்போது பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்கத் தயார் என்றும் கூறினார்.

இந்நிலையில் பாஜக சார்பில்முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் தரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கேரளாவில் யுடிஎஃப், எல்டிஎஃப் இரண்டு அரசுகளாலும் பல முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. கேரளாவுக்கு நான் சிலவற்றை செய்ய விரும்புகிறேன். இதுதான் பாஜகவில் இணைய முக்கியக் காரணம்.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தை கடன் சுமையிலிருந்து மீட்பதிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதன்மை கவனம் செலுத்துவோம்’ என்றார்.

தரன் பணியாற்றி வந்தடெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நேற்று அவரது கடைசிபணி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் கவர்னர் பதவியல்லாமல் முதல்வர் பதவிக்கு வர விரும்புகிறீர் எனக் கேட்கப்பட்டதற்கு, ‘கவர்னர் பொறுப்பில் மாநிலத்துக்காகப் பங்காற்றுவதற்கான அதிகாரம் பெரிதாக இல்லை. எனவேதான் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x