Last Updated : 04 Mar, 2021 06:58 PM

 

Published : 04 Mar 2021 06:58 PM
Last Updated : 04 Mar 2021 06:58 PM

இவிஎம் வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை; ரத்து செய்ய முயல்வோம்: அகிலேஷ் யாதவ் பேட்டி


மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சிக்கு வந்தால், இவிஎம் எந்திரங்களை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடும் என்று சமாஜ்வாதிக் கட்சியிந் தலைவர் அகிலேஷ்யாதவ் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதிக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இப்போது இருந்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜான்ஸி நகரில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் " மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில்கூட வாக்குச்சீட்டு முறைதான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட்டு, பலநாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் இவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது.

நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்குத் தயாராகும் வகையில் பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் வென்றுவிட முடியும், பாஜகவைத் தோற்கடிப்போம். மாநிலத்தில் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைந்தபின், மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்

மின்னணு வாக்கு எந்திரத்தைப் பயன்பாட்டிலிருந்து எவ்வாறு ஒழிப்பீர்கள் எனக் கேட்டதற்கு அகிலேஷ் யாதவ் தெளிவாக பதில் அளிக்கவில்லை

கூட்டணி குறித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில் " பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் போன்று உத்தரப்பிரதேசத்தில் நிலைமை இல்லை. பிஹாரில் மகாக் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழலில், பாஜக தலையிட்டு அதை நடக்கவிடாமல் செய்தது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் தோல்வியைச் சந்திக்கும். சமாஜ்வாதிக் கட்சி 350 இடங்களில் வெல்லும் என நம்புகிறேன்.

சட்டப்பேரவையில் நாங்கள் அணியும் தொப்பி குறித்து முதல்வர் ஆதித்யநாத் பேசுகிறார். 'கறுப்பு இதயம்' உள்ளவர்கள், 'கறுப்பு தொப்பி' அணிகிறார்கள் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நாங்கள் அணியும் சிவப்பு நிறத் தொப்பி, புரட்சியையும், ரத்தத்தையும், உணர்ச்சிகளையும் காட்டுகிறது. ஆனால், ஆதித்யநாத்துக்கு எந்தவிதமான உணர்வுகளும் இல்லை.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பாஜக அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பாஜக ஜனநாயகத்தைக் கொலை செய்கிறது. உத்தரப்பிரதேச்தில் மேலவையில் சமாஜ்வாதிக் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தும், அரசு அதை புறக்கணிக்கிறது
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x