கோவாக்ஸின் ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவினி: ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்

கோவாக்ஸின் ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவினி: ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்
Updated on
1 min read

கோவாக்ஸின் கரோனா தடுப்பூசி சஞ்சீவினியை போன்றது, அந்த சஞ்சீவினியை ஹனுமன் இந்தியாவிற்கு வெளியே சென்று நமக்கு கொண்டு வந்தார், இந்த சஞ்சீவினி நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடுமுழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1-ம் தேதியான நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் நேற்று கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டனர். இவர்கள் கோவாக்ஸின் கரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது:

கரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸினுக்கு நாம் அனுமதி வழங்கியுள்ளோம். ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவினியை போன்றது. அந்த சஞ்சீவினியை இந்தியாவிற்கு வெளியே சென்று ஹனுமன் நமக்கு கொண்டு வந்தார்.

ஆனால் இந்த சஞ்சீவினி உங்கள் வீட்டுக்கு அருகிலேயே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும். வாங்கும் சக்தி கொண்டவர்கள் ரூ. 250 கொடுத்து இந்த கரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in