Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM

முட்கள் நிறைந்த கூண்டில் அடைத்து நாகாலாந்தில் குற்றம் செய்வோருக்கு பாரம்பரிய முறைப்படி தண்டனை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. பழங்குடியின மக்கள்அதிகம் வாழும் மாநிலம்.இந்த மாநிலத்துக்கென சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற் றாமல், குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு பாரம்பரிய முறைப்படி தண்டனை வழங்கப்படுகிறது.

நாகாலாந்தில் வளரும் ‘மசாங்-பங்’ என்ற ஒருவகை மரம் தோலில் அதிகமாக நமைச்சல் ஏற்படுத்த கூடியது. அதனால் இந்த வகை மரத்தை நாகாலாந்து மக்கள் விரும்புவதில்லை. ஆனால், குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்க இந்த மரத்தின் கட்டைகளை பயன்படுத்தி முக்கோண வடிவில் கூண்டு அமைக்கின்றனர். அந்த மரத்தில் முட்கள்நிறைந்திருக்கும், அத்துடன் தோலில் நமைச்சல், எரிச்சலை ஏற்படுத்தும். குற்றம் செய்பவர்களை இதுபோன்ற கூண்டில் அடைத்து நாகாலாந்து முன்னோர்கள் தண்டனை வழங்கி வந்துள்ளனர். அந்த வழக்கத்தை மீட்டெடுத்து சில கிராம மக்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

திருட்டு, போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல் போன்றகுற்றங்களை செய்வோர்,நாகாலாந்தில் பின்பற்றப்படும்சமூக கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு நமைச்சல் ஏற்படும் முட்கள்நிறைந்த மரக் கூண்டுக்குள் அடைக்கப்படுகின்றனர்.அந்தக் கூண்டில்ஒருவர் மட்டுமே இருக்க முடியும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்பஇந்தக் கூண்டில் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் குற்றவாளிகள் அடைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து சுச்சுயிம்லாங் கிராம கவுன்சில் தலைவர் சனென்பான்ஜென் கூறும்போது, ‘‘சிலகிராமத்தினர் இந்த பாரம்பரிய தண்டனையை இன்றும் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர். அதை மற்ற கிராமத்தினரும் பின்பற்ற முயற்சித்து வருகின்றனர். மசாங்-பங் மரம் உள்ளங்கையை பாதிக்காது. ஆனால், தண்டனைக்காக கூண்டுகள் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இதுபோன்ற கூண்டுகள்,கிராமத்தின் மையப் பகுதியில்அனைவரும் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. கூண்டில்அடைக்கப்படும் குற்றவாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் உணவு வழங்கலாம்.

குற்றம் செய்வோரை அனைவரும் பார்க்கும் வகையில் அந்தக் கூண்டில் அடைக்கின்றனர். அவர்களால் வேறு எங்கும் நகர முடியாது. இதனால் நமைச்சல் ஏற்பட்டு குற்றவாளிகள் துன்புறுவார்கள். அதைவிட அவர்களது சமூகத்தின் அனைவரும் பார்க்கும் போது மிகுந்த அவமானம் அடைவார்கள். தாங்க முடியாத நமைச்சலுக்கு பயந்தே குற்றம்செய்ய மாட்டார்கள். இதனால் குற்றங்கள் குறையும் என்றுநாகாலாந்து மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x