

நேருவின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நேருவின் கொள்கைகளுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டின் கட்டமைப்பு மற்றும் மக்களின் நலனுக்கான பணியில் அவரை எந்தவிதத்திலும் சந்தேகிக்க முடியாது.
காங்கிரஸ்காரரான நேருவை நான் எப்போதும் அரசியல் கண்ணாடி கொண்டு பார்த்தது இல்லை. தேசிய கண்ணாடி அணிந்து தான் அவரை பார்த்திருக்கிறேன்.
நேரு போன்ற உன்னதமான தலைவர்களின் பங்களிப்பாலும், உழைப்பாலும் தான் இன்று நமது நாட்டில் வலுவான நாடாளுமன்றம், திறமையான அரசியல் நிர்வாகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் அச்சமற்ற ஊடகம் ஆகியவை உருவாகி இருக்கின்றன. தவிர உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் இந்தியா உருப்பெற்று இருக்கிறது. அந்த ஜனநாயகத்தின் வெற்றியை தான் நாம் தற்போது கொண்டாடி வருகிறோம்.
தொழிற்துறைக்கு நேரு முக்கியத்துவம் கொடுத்தாலும், வேளாண்மை தான் நாட்டுக்கு முக்கிய தேவை என்பதை உணர்ந்திருந்தார். இதன் காரணமாகத் தான் அவர் எப்போதும் “தொழில்துறை மற்றும் உருக்கு ஆலைகளின் வளர்ச்சிக்காக நான் எப்போதும் துணை நிற்பேன். ஆனால், அதை விட வேளாண்மை மிகவும் முக்கியம்” என்று கூறி வந்தார்.
இதே போல் குழந்தைகளுக்கும் போதிய கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். குழந்தைகளுக்கு முறை யாக கல்வி அறிவு வழங்கினால் தான் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க முடியும் என் பதையும் அவர் தெரிந்து வைத் திருந்தார்.
பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மீதான நேருவின் கொள்கைகள் பாராட்டத் தக்கவை. எவ்விதத்திலும் குறை கூற முடியாதவை. பொதுத் துறை மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் திட்டங்களை முதன் முதலில் துவக்கி, தற்போதைய வளர்ச்சிக ளுக்கும் வித்திட்டவர் அவரே. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.