தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மார்ச் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மார்ச் 5-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் இதேபோன்ற மனு, தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையின் நிலுவையில் இருக்கிறது. தற்போது தினேஷ் என்பவரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களும் சேர்ந்து விசாரிக்கப்பட உள்ளன.

சென்னையை சேந்த தினேஷ் என்ற மாணவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல விவகாரங்களில் இதர பிரிவை (ஓசி) சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி மண்டல் தீர்ப்பின்படி 50 சதவீதமாக குறைக்க உத்தரவிட வேண்டும்,’ என தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுத்த பின்னர்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பின் தங்கிய சமூகத்தினரை முன்னேற்ற வேண்டும் எனபதற்காகதான் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இதற்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்ககப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து ரிட் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த மனுவை வரும் மார்ச் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பு, பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கான அமைப்பும்தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் எனக் கோரிய மனுவும் மார்ச் 5-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in