Last Updated : 28 Feb, 2021 05:35 PM

 

Published : 28 Feb 2021 05:35 PM
Last Updated : 28 Feb 2021 05:35 PM

மோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல்


நாம் மிகவும் வல்லமைமிக்க எதிரிக்கு எதிராக(மோடி) போரிட்டு வருகிறோம்.ஆனால், மோடியை விட மிக்பெரிய எதிரிகளை எல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற நாசரேத் தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ஒருவர் ராகுல் காந்தியிடம், " நீங்கள் ஆட்சியைப் பிடித்து உங்கள் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தக் காத்திருப்பதைவிட, அந்தத் திட்டங்களை மோடி அரசால் நிறைவேற்றவைக்கலாமே" எனக் கேட்டார்.

அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் " நிச்சயமாக மக்களின் சக்திவாய்ந்த, மதிப்பு மிக்க ஆதரவால் நிச்சயம் மோடியைத் தோற்கடிப்போம். கனவுகளைப் பெரிதாகக் காண வேண்டும்.அதில் சில கனவுகள் நடக்காமல்கூட போகும்.
நாம் வலிமைமிக்க(மோடி) எதிரியுடன் போரிட்டு வருகிறோம்.

நாட்டின் பண வலிமை மிக்க எதிரியுடன் போரிட்டு வருகிறோம், எதிர்கட்சிகளைஅழிக்கும் எதிரியுடன் போரிட்டு வருகிறோம். இதற்கு முன் இதேபோன்ற எதிரியுடன்தான் நாம் போரிட்டோம்.

ஆங்கிலேயர் எனும் மிகப்பெரிய எதிரியை நாம் வீழ்த்திவிட்டோம். மோடியை விட ஆங்கிலேயர்கள் மிகவலிமை மிக்கவர்கள் அவர்களையே மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். இப்போது இந்த புதிய எதிரி வந்துள்ளார். ஆங்கிலேயர்களை அனுப்பிய அதே வழியில் மக்கள் நரேந்திர மோடியை நாக்பூருக்கு(ஆர்எஸ்எஸ் தலைமையிடம்) அனுப்புவார்கள்.

நெல்லையப்பர் கோயிலுக்கு ராகுல் காந்தி சென்ற காட்சி


மக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வென்றபின், மோடி, அரசியல் மறதி நிலைக்குச் செல்வார். எங்களுக்கு எதிராக அவர்கள் தவறான வார்த்தைகளையும், வன்முறையையும் ஏவினாலும், இந்த அரசியல் வெற்றியை நாங்கள், எந்தவிதமான வெறுப்பும், கோபமும், வன்முறையும் பிரதமர் மோடியை நோக்கிச் செலுத்தாமல் அடைவோம்" எனத் தெரிவித்தார்

இந்துத்துவா குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்த அளித்த பதிலில் " பல்வேறு விஷயங்களில் இந்துத்துவாவுக்கு பிரதிநிதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், உண்மையில், இந்துத்துவா மீது எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை.

புண்படுத்துதல், கொலை செய்தல், மக்களை தாக்குதல் போன்றவற்றை இந்துமதம் போதிக்கவில்லை. ஆனால், அதை அவர்கள் செய்கிறார்கள். அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால், மத்தியில் ஆளும் அரசின் மொத்த விளையாட்டும் சாமானிய மக்களிடம் இருந்து பணத்தை திருடுவதுதான், வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பணத்தை திருடி, பெரிய தொழிலதிபர்களுக்குக் கொடுக்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x