Published : 05 Nov 2015 08:01 AM
Last Updated : 05 Nov 2015 08:01 AM

பிஹாரில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 5-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடை பெறுகிறது.

மதுபானி, சுபவுல், கிஷண் கஞ்ச், ஆராரியா, புர்னியா, தர்பங்கா, கதிஹர், மாதேபுரா, சாஹர்ஷா ஆகிய 9 மாவட்டங் களில் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. 1.55 கோடி வாக்கா ளர்கள் இத்தொகுதிகளில் வாக்குரிமை பெற்றுள்ளனர். 58 பெண் வேட்பாளர்கள் உட்பட 827 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

14 ஆயிரத்து 709 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5, 518 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப் பட்டுள்ளன. கிஷண்கஞ்ச், ஆராரியா, புர்னியா, தர்பங்கா ஆகிய மாவட்டங்கள் பதற்ற மானவை என அறிவிக்கப்பட்டுள் ளன.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மத்திய துணை ராணுவப் படை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நதி யோரப்பகுதிகளில் 53 விசைப் படகுகளில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா சிறு விமானங்களும் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பிஹாரையொட்டியுள்ள இந்திய நேபாள எல்லை மூடப்பட்டு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டுவதற்கு யாரும் அனு மதிக்கப்படமாட்டார்கள். மாவட் டங்களுக்கு இடையிலான எல்லை களும் மூடப்பட்டு, ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிம்ரி பக்தியார்புர், மஹிசி ஆகிய இரு தொகுதிகளில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறும். இதர 55 தொகுதி களில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.

பிஜேந்திர பிரசாத் யாதவ், நரேந்திர நாராயண் யாதவ், துலால்சந்த் கோஸ்வாமி, பீமா பாரதி, நவுசத் ஆலம், ஸெலி சிங் ஆகிய 6 அமைச் சர்கள் இத்தேர்தலில் களமிறங்கி யுள்ளனர்.

இன்றைய வாக்குப்பதி வுடன் பிஹார் தேர்தல் நிறைவு பெறுகிறது. வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x