இந்தியா உட்பட 10 நாடுகள் தீவிரவாதத்தால் கடும் பாதிப்பு: ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்

இந்தியா உட்பட 10 நாடுகள் தீவிரவாதத்தால் கடும் பாதிப்பு: ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்
Updated on
1 min read

‘‘இந்தியா உட்பட 10 நாடுகள் தான் கடந்த 2014-ம் ஆண்டு தீவிர வாதத்தால் அதிகம் பாதிக்கப்பட் டுள்ளன’’ என்று ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும், ‘இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ்’ என்ற அமைப்பு, ‘சர்வதேச தீவிரவாத அட்டவணை - 2015’ஐ வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் 162 நாடுகள் குறித்து ஆய்வு நடத் தப்பட்டது. இதில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா உட்பட 10 நாடுகள் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிர வாத தாக்குதல்களில் உயிரிழந் தவர்களில் பாதி பேர், ஐஎஸ் மற்றும் ஆப்ரிக்காவில் செயல்பட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகளால் இறந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலான புள்ளிவிவரத்தை பார்க்கும்போது, கடந்த ஆண்டு தீவிரவாதத்தால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1.2 சதவீதம் (416 பேர்) உயர்ந்துள்ளது. இந்தியாவில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய 2 தீவிரவாத அமைப்புகள்தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் தீவிரவாதிகளால் இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு 24 பேர் பலியாகி உள்ளனர். அதேநேரத்தில் ஹிஸ்புல் அமைப்பால் 11 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 2013-ம் ஆண்டை விட (30) அதிகம்.

எனினும், 2013-ம் ஆண்டு தற் கொலை படை தாக்குதல் நடந்தது போல், 2014-ல் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000 - 2014 வரை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியா 14 முறை இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் தீவிரவாதத் தால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80 சதவீதம் அதி கரித்துள்ளது. கடந்த 2013-ல் தீவிரவாதத்தால் 18,111 பேர் பலியா யினர். இது கடந்த ஆண்டு 32,658 ஆக உயர்ந்துள்ளது.

தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகளில் பாகிஸ்தான் 4-வது இடத்தையும், அமெரிக்கா 35-வது இடத்தையும் வகிக்கின்றன. உலகளவில் தீவிரவாதத்தால் இறந்தவர்களில் 51 சதவீதம் பேர் ஐஎஸ் மற்றும் போகோ ஹரம் தீவிரவாதிகளால் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in