

காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் ஆகிய ரசாயனம் அளவுக்கதிகமாக இருந்ததால் தடை செய்யப்பட்ட நெஸ்லே மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நெஸ்லே நிறுவனம் தற்போது நஞ்சன்குட் (கர்நாடகா), மோகா (பஞ்சாப்), பிகோலிம் (கோவா) ஆகிய 3 இடங்களில் மட்டும் மேகி நூடுல்ஸை உற்பத்தி செய்து வருகிறது.
மேகி நூடுல்ஸ் வகையறாக்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் நெஸ்லே வழக்கு தொடர்ந்தது.
சட்ட விதிகளுக்கு புறம்பாக மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், தடை நீக்கப்படுகிறது என்றும், அரசு சோதனைக் கூடங்களில் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து மீண்டும் விற்பனை செய்யலாம் என்று கூறியிருந்தது.
இதனையடுத்து பஞ்சாப், கோவா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து மேகி நூடுல்ஸ் தற்போது விற்பனைக்கு மீண்டும் வந்துள்ளது.