நாடு முழுவதும் புதிதாக 16,488 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: 3வது நாளாக 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாடு முழுவதும் புதிதாக 16,488 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: 3வது நாளாக 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
Updated on
1 min read

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,79,979 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக 16000க்கும் மேல் என்றளவில் கரோனா பாதிப்பு நீடித்துவருகிறது. அதேவேளையில், இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,07,63,451 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,56,938 ஆக அதிகரிதுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 12,771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 1,59,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி, மார்ச் 1ம் தேதியிலிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, இதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்நிலையில்,நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1,37,56,940 பேருக்கு கரோனா தடுப்பூசி வழக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in