

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தர விட்டது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் தற்போதுதான் சிபிஐக்கும், அமலாக்கத் துறைக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், தனக்கு சாதகமாக வாதாடுவதற்காக அங்குள்ள பல வழக்கறிஞர்களை கோடிக்கணக்கில் பணம்கொடுத்து நீரவ் மோடி நியமித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், இந்தியாவில் நீரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் சிபிஐயும், அமலாக்கத் துறையும் திரட்டி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன.
இவை அனைத்தையும் கவனமாக ஆய்வு செய்ததற்கு பிறகே, நீரவ் மோடி செய்த குற்றங்களின் தீவிரத் தன்மையை நீதிபதிகள் உணர்ந்தனர்.
அதன் பின்னரே, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.