Last Updated : 26 Feb, 2021 06:17 PM

 

Published : 26 Feb 2021 06:17 PM
Last Updated : 26 Feb 2021 06:17 PM

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: எத்தனை கட்டங்கள்?- தேதி குறித்த முழு விவரம்

கோப்புப்படம்

புதுடெல்லி,

5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ம் தேதி 2-ம் கட்டம், 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

அசாம் மாநிலம்

முதல் கட்டத் தேர்தல்: மார்ச் 27

2-ம் கட்டத் தேர்தல்: ஏப்ரல் 1

3-ம் கட்டத் தேர்தல்: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை : மே 2

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும்.

கேரளாவில் சட்டப்பேரவைக் காலம் ஜூன் 1-ம் தேதி முடிகிறது. இங்குள்ள 140 தொகுதிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 14 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்

தமிழகம், கேரளம், புதுச்சேரி ஒரே கட்டத்தில் தேர்தல்

தமிழகம்- ஏப்ரல் 6-ம் தேதி

கேரளா- ஏப்ரல் 6-ம் தேதி (மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல்)

புதுச்சேரி- ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

வாக்கு எண்ணிக்கை மே-2

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக் காலம் மே 30-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு 294 தொகுதிகள் உள்ளன. இதில் எஸ்.சி. பிரிவினருக்கு 68 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம்தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டம் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டம் ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கம் (8 கட்டங்கள்)

முதல்கட்டத் தேர்தல்- மார்ச் 27

2-ம் கட்டத் தேர்தல்- ஏப்.1

3-ம் கட்டத் தேர்தல்- ஏப்.6

4-ம் கட்டத் தேர்தல்- ஏப்.10

5-ம் கட்டத் தேர்தல்- ஏப். 17

6-ம் கட்டத் தேர்தல்- ஏப்.22

7-ம் கட்டத் தேர்தல்- ஏப்.26

8-ம் கட்டத் தேர்தல்- ஏப். 29

வாக்கு எண்ணிக்கை மே-2

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x