‘நரேந்திர மோடி மைதானம்’- மோடேரா ஸ்டேடியம் பெயர் மாற்றம்; புதிய பொலிவுடன் திறப்பு

‘நரேந்திர மோடி மைதானம்’- மோடேரா ஸ்டேடியம் பெயர் மாற்றம்; புதிய பொலிவுடன் திறப்பு
Updated on
2 min read

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 1.10 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானமே பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. இந்த மைதானம் முறியடித்திருந்தது.

800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது. மோட்டேரா எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in