Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

உலகின் மிகப்பெரிய மைதானமான மோடேராவில் 55 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காண அனுமதி: இந்தியா - இங்கிலாந்து மோதும் பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

1.10 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட கேலரிகள்.

அகமதாபாத்

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி கண்டிருந்தன. தொடர் 1-1 என சமநிலை வகிக்கும் நிலையில் 3-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அகமதாபாத்தின் மோடேராவில் உள்ள சீரமைக்கப்பட்ட சர்தார் படேல் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

இந்த மைதானம் 1.10 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானமே பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. இந்த சாதனையை சர்தார் படேல் மைதானம் முறியடித்திருந்தது.

சிறப்புமிக்க இந்த மைதானத்தில் இன்று தொடங்கும் பிங்க் பந்து டெஸ்ட்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளால் மைதானத்தில் 50 சதவீதரசிகர்களுக்கே அனுமதி வழங்கப்பட் டுள்ளது. அந்த வகையில் 55 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளனர். சீரமைக்கப்பட்ட மைதானம் என்பதால் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை அறிய இரு அணிகளும் ஆர்வமாக உள்ளன.

ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற நெருக்கடியில் உள்ளது இந்திய அணி. அதிலும் ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். பகலிரவு டெஸ்ட் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரீத் பும்ரா,இஷாந்த் சர்மா ஆகியோருடன் உடற்தகுதியை பெற்றுள்ள உமேஷ் யாதவும்விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும். இதில் இஷாந்த் சர்மாவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

உமேஷ் யாதவ் களமிறங்குவதால் குல்தீப் யாதவ் நீக்கப்படுவார். அதே வேளையில் 4-வது வேகப்பந்து வீச்சாளர் தேவை என அணி நிர்வாகம் கருதினால் அக்சர் படேலுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்படக்கூடும். ஏனெனில் கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 7 ஓவர்களை மட்டுமே வீசி யிருந்தனர்.

இங்கிலாந்து அணியிலும் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கக்கூடும். 3-வது வேகப்பந்து வீச்சாளராக மார்க்வுட் அல்லது ஸ்டூவர்ட் பிராடு இடம்பெறக்கூடும். மொயின் அலி இல்லாததால் அவரது இடத்தை டாம் பெஸ் நிரப்பக்கூடும்.

பேட்டிங்கில் ஸாக் கிராவ்லி உடற்தகுதி பெற்றுள்ளதால் ரோரி பர்ன்ஸ் நீக்கப்படக்கூடும். அதேபோன்று டேன்லாரன்ஸுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோஇடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. பகலிரவு டெஸ்ட் என்பதால் அந்திப்பொழுதில் பந்துகள் சற்று வேகமும், அதிக அளவில் ஸ்விங்கும் ஆகும்.

இதனால் அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர் களுக்கும் இடையே கடும் சவால் நிலவும். இதனால் இரு அணிகளும் அந்திப்பொழுதை சிறப்பாக கையாள் வதில் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x