உத்தராகண்ட் பனிச்சரிவில் காணாமல் போன 136 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு?

உத்தராகண்ட் பனிச்சரிவில் காணாமல் போன 136 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு?
Updated on
1 min read

உத்தராகண்ட் பனிச்சரிவு சம்பவத்தில் காணாமல் போன 136 பேரை உயிரிழந்ததாக அறிவிப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமடம் பகுதியில் கடந்த 7-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அலக் நந்தா, தவுலி கங்கா, ரிஷி கங்கா ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

இதையடுத்து, பேரிடர் மீட்புக் குழு, ராணுவம், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நேற்றைய தினம் வரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 136 பேரின் நிலை என்னவானது என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.

இந்நிலையில், இப்பேரிடர் சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆவதால், காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என நம்பப்படுகிறது. இதனால், மாயமான 136 பேரையும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய் துள்ளது.

இவ்வாறு அறிவிப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காலதாமதம் இன்றி நிவாரண உதவி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in