Last Updated : 07 Nov, 2015 08:05 AM

 

Published : 07 Nov 2015 08:05 AM
Last Updated : 07 Nov 2015 08:05 AM

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஆபாச வீடியோ: கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக் கள் பதிவு செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் சிக்கியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில இளைஞர் மேம்பாடு துறை செயலாளராக கபில் மோகன் என்ற ஐஏஎஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் லோக் ஆயுக்தா போலீஸார் அவருக்கு சொந்தமான அலுவலகம், வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடத்தின‌ர்.

பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூரில் கபில் மோகனின் தந்தை நரேஷ் மோகன் மற்றும் மகன் அஹான் மோகன் நடத்தி வரும் பி.கே.எஸ். பைனானஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது ரூ.4.37 கோடி ரொக்கமும், 2.5 கிலோ தங்கமும், ஹார்ட் டிஸ்க் ஒன்றும் சிக்கிய‌து.

அந்த ஹார்ட் டிஸ்கில் கபில் மோகன் தொடர்பான ஆவணங்களும், அவரது குடும்ப புகைப்படங்களும் இருந்தது. மேலும் குழந்தைகள் தொடர்பாக 20 ஆபாச பட வீடியோக்களும், பெரியவர்கள் தொடர்பான 17 ஆபாச பட வீடியோக்க‌ளும் பதிவாகி இருந்த‌து.

இது தொடர்பாக கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸார் பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு நேற்று முன் தினம் கடிதம் எழுதினர். அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பதும், தரவிறக்கம் செய்வதும், வீடியோக்களை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.

எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரித்து உண்மையான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து ய‌ஷ்வந்த்பூர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் கபில் மோகனின் பெயரோ, அவரது தந்தை, மகனின் பெயரோ சேர்க்காமல் மர்ம நபரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x