பியூச்சர் குழும நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்குவதற்கு நீதிமன்றம் தடை

பியூச்சர் குழும நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்குவதற்கு நீதிமன்றம் தடை
Updated on
1 min read

பியூச்சர் சங்கிலித் தொடர் நிறுவனங்களை முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் தனிநிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த இது வழி வகுக்கும். எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் தொடர்ந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை ரத்து செய்ததோடு, நிறுவன தீர்ப்பாயம் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு மீதான மறுவிசாரணை 5 வாரங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

உச்ச நீீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பியூச்சர் நிறுவனத்தின் பங்கு விலைகளும் (10%), அதன் கடன் பத்திரங்கள் (3.8%) மதிப்பும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

பியூச்சர் குழுமம் பிக் பஜார் என்ற பெயரில் சங்கிலித் தொடர் விற்பனையகங்களை நடத்தி வருகிறது. இதை ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலை யன்ஸ் ரீடெய்ல் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அமெரிக்காவின் ஜெஃப் பிஸோஸுக்குச் சொந்த மான ஆன்லைன் வர்த்தக நிறு வனமான அமேசான் வழக்கு தொடர்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் சிங்கப்பூரில் உள்ள தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் இதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் விற்பனைக்கு தடை விதித்துள்ளது, அந்நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திஉள்ளது.

அமேசான் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்நோக்கி யிருந்தன. இந்திய மண்ணில் வெளிநாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கு எத்தகைய பதில் கிடைக்கிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in