பெரு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது, விவசாயிகளுக்கு வங்கிக் கதவு திறப்பதில்லை: மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பெரு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது, விவசாயிகளுக்கு வங்கிக் கதவு திறப்பதில்லை: மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

நரேந்திர மோடி அரசாங்கத்தில் பெரு நிறுவன முதலாளிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது; ஆனால், விவசாயிகளுக்கு வங்கிக் கதவுகள் திறப்பதில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாபில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அங்கு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

நேற்று மால்வா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இதுதொடர்பாகக் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நில மசோதா விவகாரத்தில் காங்கிர ஸின் வாதங்களை ஏற்க மறுக்கிறது.

இம்மசோதா தொழிலதிபர் களுக்குச் சாதகமாகவும், விவசாயி களுக்கு எதிராகவும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள அரசு மறுக்கிறது.

மோடி அரசில், பெரு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு வங்கிக் கதவுகள் திறக்கப்படுவதில்லை.

நில மசோதாவைப் பொறுத்த வரை, கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன் படுத்தப்படவில்லை என்றால், விவசாயிக்கே திருப்பி அளிக்கப் பட வேண்டும்.

நிலம் கையகப்படுத்தப்படு வதால் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஏற்படும் இழப்பை சமூகத் தணிக்கை மூலம் அறிய வேண்டும். இவற்றை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.

விவசாயிகள் கடனால் தத்தளிக்கின்றனர், உற்பத்தித் திறன் குறைந்து விட்டது என்பதற்கு பஞ்சாப் வேளாண்மைத் துறையே சான்று. மோடி அரசும், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அரசும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானவை.

பஞ்சாபில் 70 சதவீதம்பேர் போதைப் பொருளுக்கு அடிமை யாகி வருகின்றனர் என நான் கூறியபோது, அகாலிதளம் மூத்த தலைவர்கள் கேலி செய்தனர். தற்போது பலரும் அதே கருத்தைக் கூறிய பிறகு அவர்களும் ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

போதை மருந்தைக் கட்டுப் படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு கல்வியளிப்பதே பஞ்சாபில் உள்ள தற்போதைய மிகப்பெரும் சவால்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மல்லவாலா கிராமத்தில், விவசாயம் நலிவடைந் ததால் தற்கொலை செய்துகொண்ட ஜக்தேவ் சிங் (65) என்ற விவசாயியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in