

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங் களை அளித்ததாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதிகாரி அப்துல் ரஷீத் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் முகமது இஜாஸ் என்ற ஐ.எஸ்.ஐ. உளவாளி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா வில் நேற்று இர்ஷாத் அன்சாரி (51), அஸ்பக் அன்சாரி (23), முகமது ஜஹாங்கீர் ஆகிய 3 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது செய்யப்பட் டனர். அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே இந்திய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரஷீத் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் ஏஜெண்டுக்கு அளித் ததை குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த அதிகாரி மற்றும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி, காஷ்மீரில் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ. உள வாளிகள் பலர் கைது செய்யப்பட் டிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 25 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்ப தாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த மாநில எல்லைப் பகுதிகளில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.