Last Updated : 17 Nov, 2015 09:32 AM

 

Published : 17 Nov 2015 09:32 AM
Last Updated : 17 Nov 2015 09:32 AM

காஷ்மீரில் ஐ.எஸ். கொடி அசைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

காஷ்மீரில் ஐ.எஸ். கொடி அசைப் பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு இதுவே சரியான தரு ணம் என்று சிவசேனா கூறியுள்ளது.

பிரான்ஸில் பயங்கரவாத தாக்கு தலில் 129 பேர் உயிரிழந்துள்ள நிலை யில் சிவசேனா இவ்வாறு கூறி யுள்ளது. இதுகுறித்து அக்கட்சி இதழான ‘சாம்னா’வின் தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:

பாரிஸ் நகர தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த இந்த அமைப் பின் செயல்பாடு தீவிரம் அடைந் துள்ளது. காஷ்மீரில் ஐ.எஸ். கொடி அசைக்கப்படுவது, மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும். பாரீஸ் படுகொலை சம்பவத்துக்குப் பின் இந்தப் பிரச்சினையை நாம் இன்னும் தீவிரமாக அணுகவேண் டும். காஷ்மீரில் ஐ.எஸ். கொடி அசைக்கப்படும் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வதற்கு இதுவே சரியான தருணம்.

பாரிஸ் பயங்கரவாத தாக்குத லுக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்கும்போது நமக்கு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. ஏனென் றால் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடை பெறும் வரை, இந்தியாவின் வலியை இந்த நாடுகள் உணர்வதில்லை.

பயங்கரவாதிகள் தற்போது ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நாடுகளின் தகர்க்க முடியாத பாதுகாப்பு அரண் களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. பிரான்ஸில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த சம்பவம் அதிக உயிர்களை பலிகொண்டுள் ளது. இந்த சம்பவத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகள் பாடம் கற்க வேண்டும். பயங்கரவாதிகளுக் கான மனித உரிமைகள் பற்றிய பேச்சுகளை கைவிட வேண்டும். பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும். இவ்வாறு சாம்னா இதழில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x