Published : 18 Nov 2015 09:15 AM
Last Updated : 18 Nov 2015 09:15 AM

ஆந்திராவில் கனமழைக்கு 10 பேர் பலி

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இது வரை 10 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

மழை காரணமாக நெல்லூர்-சென்னை, விஜயவாடா-சென்னை, நெல்லூர்-திருப்பதி, ஸ்ரீகாள ஹஸ்தி-சென்னை இடையே சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கனமழையால் பாதிக்கப்பட் டுள்ள 3 மாவட்டங்களில் அதிகாரி கள், அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணி களை செய்து வருகின்றனர். இது வரை மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதேபோல வீடு இழந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதனிடையே நேற்று மாலை கடப்பா மாவட்டம் போயபல்லி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த லில், வீட்டில் விளையாடிக் கொண் டிருந்த 4 சிறுவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x