இளம்பெண் கீதா திரும்பி வந்ததுபோல் தாய்நாடு செல்ல துடிக்கும் பாகிஸ்தான் சிறுவன்

இளம்பெண் கீதா திரும்பி வந்ததுபோல் தாய்நாடு செல்ல துடிக்கும் பாகிஸ்தான் சிறுவன்
Updated on
2 min read

இந்தியாவைச் சேர்ந்த கீதா, 8 வயதில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டாள். இந்த சிறுமிக்கு வாய் பேச முடியாது, கேட்கும் திறனும் இல்லை. அவளை எதி அறக் கட்டளையை சேர்ந்தவர்கள் வளர்த்து வந்தனர். 14 ஆண்டுகள் கழிந்த நிலையில் கீதா தாய்நாட்டுக்கு வரவழைக் கப்பட்டிருக்கிறார். இந்த செய்திகள், படங்கள் ஊடகங் களில் பரபரப்பாக வெளி யாயின.

இந்நிலையில், கீதாவை போலவே பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ரம்ஸான் தவறுதலாக இந்தியாவுக்குள் வந்ததும், 2 ஆண்டுகளாக இங்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

பாகிஸ்தானை சேர்ந்த சிறுவன் முகமது ரம்ஸான் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோ பர் மாதம் இந்திய எல்லைக் குள் நுழைந்து, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு வந்துள்ளான். அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த ரம்ஸானை போலீஸார் மீட்டுள்ளனர். பின்னர் ‘ஆரம்பம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அர்ச்சனா சஹே என்பவ ரிடம் அவனை ஒப்படைத்துள் ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அர்ச்சனாவின் ஆரம்பம் ஆதர வற்றோர் இல்லத்தில் ரம்ஸான் பராமரிக்கப்படுகிறான்.

இளம்பெண் கீதா மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பிய நிலை யில், தன்னையும் விரைவில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப் பார்கள் என்ற நம்பிக்கையில் ரம்ஸான் காத்திருக்கிறான். இதுகுறித்து அர்ச்சனா கூறிய தாவது:

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் அதிகாரி களை தொடர்பு கொண்டு ரம்ஸானை பற்றி கூறினேன். அவனை மீண்டும் பாகிஸ் தானுக்கு அனுப்புவதற்கு நட வடிக்கை எடுக்க கோரினேன். அப்போது என்னுடைய கோரிக்கைக்கு யாரும் முக்கியத்துவம் தரவில்லை.

இப்போது பாகிஸ்தானில் இருந்து இளம்பெண் கீதா இந்தியா வந்த பிறகு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. ரம்ஸானை தாய்நாட்டுக்கு திரும்பி அனுப்புவது பற்றி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத் துக்கு ராஜாராம் எடுத்துச் செல்ல போகிறார் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு அர்ச்சனா கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர் பாளர் இதுகுறித்து கூறுகை யில், ‘‘சிறுவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்பதில் சில குழப்பங்கள் உள்ளன. அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் என்பதை அந்த நாடு உறுதி செய்துவிட்டால், அதன் பின் அவன் தாய்நாடு திரும்பு வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது’’ என்றார்.

15 வயதாகும் ரம்ஸானுக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதலே சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. ரம்ஸானின் தந்தை முகமது கஸோல். தாய் மேகம் ரஸியா. இவரை கடந்த 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார் முகமது. அதன் பின், ரம்ஸானுடன் அவர் வங்க தேசத்துக்கு சென்று, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் ரம்ஸானை சரியாக கவனிக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதனால், கடந்த 2013-ம் ஆண்டு வீட்டில் இருந்து வெளி யேறிய ரம்ஸான் இந்தியாவுக் குள் நுழைந்துவிட்டான். ராஞ்சி, மும்பை, டெல்லி போன்ற பல நகரங்களில் சுற்றியிருக்கிறான். கடைசியில் போபால் வந்த போதுதான் போலீஸார் சிறுவனை மீட்டு ஆரம்பம் இல்லத்தில் ஒப் படைத்துள்ளனர்.

கீதாவின் வருகையால் அப்பா அம்மாவை பிரிந்து வாழும் சிறுவன் ரம்ஸானும் தாய்நாடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in