Published : 18 Feb 2021 03:17 am

Updated : 18 Feb 2021 07:41 am

 

Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 07:41 AM

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் துர்கா பூஜை திருவிழாவின் மதிப்பு ரூ.32,377 கோடி: முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்

mamata-banerjee

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் மதிப்பு ரூ.32,377 கோடி என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒருவார காலம் நிகழும் இந்தத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு என படைப்புத் தொழில்கள் அதிகம் உருவாகும். இந்நிலையில் அத்தகைய தொழில்களின் மதிப்பு ரூ.32,377 கோடி என தெரியவந்துள்ளது.


துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பை ஆய்வு செய்வதற்கென்று மேற்குவங்க மாநிலம் அரசு குழுவை அமைத்தது. பிரிட்டிஷ் கவுன்சில்,ஐஐடி காரக்பூர், இங்கிலாந்தில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, ‘துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பு ரூ.32,377 கோடி என ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. ஏழு நாட்கள் நிகழும் பண்டிகையில் இது மிகப் பெரிய தொகை. இது மாலத்தீவின் ஜிடிபிக்கு ஒப்பிடத்தக்கது’ என்று அவர் கூறினார். மேலும், ‘துர்கா பூஜை திருவிழாவை உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



துர்கா பூஜை திருவிழாமுதல்வர் மம்தா பானர்ஜிMamata banerjee

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x