Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 03:17 AM

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஹெலிகாப்டர் வாங்கிய பால் பண்ணை முதலாளி

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள வடபே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் போயர். அரிசி மண்டி, பால் பண்ணை, ரியல்எஸ்டேட் என்று பலவித தொழில்கள் செய்துவருகிறார். அவர் தொழில் பயணமாக பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும்போது, சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அவருக்கு நேரம் விரயம் ஆகிறது. இதைத் தவிர்க்க அவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார்.

ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு அவருடைய வடபே கிராமத்தில் ஹெலிபேட் அமைத்துள்ளார். ஒரு விமானி, இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஐந்து பாதுகாவலர்களை நியமனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க இருக்கிறார்.

‘பக்கத்தில் இருக்கும் மும்பைக்கு செல்வதென்றால் என்னுடைய முழுநாளும் வீணாகப் போய்விடுகிறது.

மாதம் நான்கு முறை நான்பிற மாநிலங்களுக்குப் பயணிக்கிறேன். போக்குவரத்து நெரிசல், நேரம் விரயம் காரணமாகவே ஹெலிகாப்டர் வாங்க முடிவெடுத்தேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x