

ஹைதராபாதில் போலீஸ்உதவி ஆய்வாளர் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் நேற்று ஒரே சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 2 கோடி ரூபாய் மதி்ப்புள்ள நகை, ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹைதராபாத் கூகட்பல்லி போலீஸ் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் ராவ், முறைகேடான முறையில் சம்பாதித்து கோடி கணக்கில் சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சுனிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே சமயத்தில் சஞ்சீவ் ராவ்வின் வீடு, அவரது உறவினர் கள் வீடு என, ஆறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப் பட்டது. அப்போது கணக்கில் வராத 75 சவரன் நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் 2 வீட்டு பத்திரங்கள், 60 ஏக்கர் வேளாண் நில பத்திரங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.