Last Updated : 15 Nov, 2015 10:43 AM

 

Published : 15 Nov 2015 10:43 AM
Last Updated : 15 Nov 2015 10:43 AM

பாரீஸில் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் உஷார் நிலை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத் தடுத்து நிகழ்த்திய தாக்குதலில், 120க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து, டெல்லி உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய நகரங் களில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், அலுவலகங்கள் பாதுகாப்பு வளையத்தில் வந்துள் ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் குறிவைத்திருப்ப தாக உளவுத் துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளதும் கருத்தில் கொள்ளப்பட்டு முக்கிய நகரங் களில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான, ரயில், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் நட்சத்திர ஓட்டல்கள், மால்கள் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘டெல்லி முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எந்த வொரு நெருக்கடியையும் சமாளிக் கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு, தீவிரவாத ஒழிப்பு படை உள்ளிட்ட பிரிவினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதே போல் நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையிலும் உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறி்த்து பிரணாப் முகர்ஜி கூறும்போது, ‘‘பிரான்ஸ் நாட்டுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும். எனது இதயம் அந்த மக்கள் படும் துயரம் கண்டு வருந்துகிறது’’ என்றார்.

லண்டனில் இருந்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பாரீஸ் நகரில் தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நாம் அனைவரும் பிரான்ஸ் மக்களுக்கு துணையாக நிற்போம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் கூறும்போது, ‘‘பாரீஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. பிரான்ஸ் மக்களின் துயரத்தில் என் மனம் பங்கேற்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

இதே போல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும், பாரீஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x