மும்பை தாக்குதல் வழக்கில் ஹெட்லியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: அரசு தரப்பில் வாதம்

மும்பை தாக்குதல் வழக்கில் ஹெட்லியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: அரசு தரப்பில் வாதம்
Updated on
1 min read

மும்பை தாக்குதல் வழக்கில் தீவிரவாதி டேவிட் ஹெட்லியை குற்றவாளியாக சேர்க்க கோரி, அரசு தரப்பில் வாதாடுவதற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ் தான் வம்சாவளி தீவிரவாதியான டேவிட் ஹெட்லி கடந்த 2006, 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் மும் பைக்கு வந்து தாக்குதல் நடத்து வதற்கு ஏதுவான இடங்களை உளவு பார்த்து, அதன் வீடியோ பதிவுகளை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பைக் குள் புகுந்த தீவிரவாதிகள் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி யதில், 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து உளவு பார்த்த டேவிட் ஹெட்லியை, அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2010ம் ஆண்டு கைது செய்தனர். மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனை விதித்தது. எனினும் இந்திய தண்டனை சட்டத்தின்படி, அவரை தண்டிப்பதற்கான குற்றப்பதிவு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், மும்பை தாக்கு தல் வழக்கில் முக்கிய குற்றவாளி யான ஜூண்டாலுடன் இணைந்து ஹெட்லி செயல் பட்டதை உறுதி செய்யும் வகையில், அவரை முக் கிய குற்றவாளியாக சேர்க்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அமெ ரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டிருந்தது. இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் வாதங்களை வைக்க அமெரிக்க நீதிமன்றம் முன் வந்தது. இதனால், கடந்த 10ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத் தில் இதற்கான வாதங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தன. அப் போது அரசு தரப்பு சிறப்பு வழக்கறி ஞர் உஜ்வால் நிகாம் ஆஜராகி, ஹெட்லி மீது கிரிமினல் சதி குற்றத்தை பதிவு செய்யும் வகையில், அவரை குற்றவாளி யாக சேர்க்க வேண்டும் என வாதாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in