

இந்திய உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியானது அடுத்த நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரிய அளவில் முடங்கின. எனினும், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜிடிபி 11 சதவீதமாக இருக்கும் என் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. சரிவிலிருக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் அடுத்த நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி 10 சதவீதமாக இருக்கும் எனக் கூறியுள்ளது. இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் வேளாண் துறையின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருப்பதும், அரசு செலவீனம் அதிகமாக இருப்பதும், நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளது. மேலும் மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இருப்பதும் கவனிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.