

நாடாளுமன்றத்தில் அரசிய லமைப்பு தொடர்பான விவாதங்கள் 2 நாட்களாக நடந்தன.
அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், ‘அரசுக்கு எந்த மதமும் இல்லை, மத அடிப்படையிலும் அரசின் நிர்வாகம் இல்லை. அரசியல் சாசனத்திலேயே இவை பொதிந்துள்ளன’ என்று கூறினார்.
ஜேட்லியின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘மத்திய அரசு நயமாக பேசி பிரிவினைவாதத்தை விற்க பார்க்கிறது. சாமான்ய மக்களின் சமூக நலனை உறுதி செய்யும் பிரிவுகளான 41,42,43 மற்றும் 45 ஆகியவற்றை ஏன் சுட்டிக்காட்டமால் ஜேட்லி மவுனமாக இருந்தார்’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘‘உலகில் தீவிரவாதம்தான் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுவதை விடுத்து, தீவிரவாதத்தை ஒடுக்கு வதற்கான நடவடிக்கைகள் அவசியம். அதற்கு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுபட வேண்டும்’’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.