

புதிய நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழி கோலோச்சியுள்ளது. 3 மத்திய அமைச்சர்கள் உட்பட பல பாஜக எம்.பி.க்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அயலுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மிகவும் அனாயசமாக சமஸ்கிருதம் பேசி உறுதி மொழி எடுத்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்து நீராதார மத்திய அமைச்சர் உமாபாரதியும் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பிறகு சுகாதார அமைச்சரும் அந்த வழியைப் பின்பற்றினார். அதாவது மீண்டும் சமஸ்கிருதத்தின் மீது கவனம் குவிய உணர்வு பூர்வமாக முன் கூட்டியே இப்படி இவர்கள் முடிவெடுத்தனரா என்பது பற்றித் தெரியவில்லை.
மேலும், கிழக்கு டெல்லி எம்.பி. மகேஷ் கிரி, மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் ஷாகிப் சிங், இமாச்சல எம்.பி.க்கள், மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல எம்.பி.க்களும் சமஸ்கிருத மொழியிலேயே உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.