

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 90 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,09,16,589 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,06,21,220 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 9,489 குணமடைந்துள்னர்.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,39,637 ஆகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 90 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,732 ஆக அதிகரித்துள்ளது.
நாடுமுழுவதும் மொத்தம் 82,85,295 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.