டீசல் விலை உயர்வு: வேலைநிறுத்தம் செய்யப் போவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் மிரட்டல்: மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

அதிகரித்து வரும் டீசல் விலை, அதிகரிக்கும் வரி, இ-வே பில், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கும் கொள்கை ஆகியவை குறித்து தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு(ஏஐஎம்டிசி) மிரட்டல் விடுத்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

95 லட்சம் டிரக்குகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டது அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்துக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்துக் கூட்டமைப்பு (ஏஐஎம்டிசி) நேற்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அதிகரித்து வரும் டீசல் விலை, அதிகப்படியான வரி விதிப்பு, இ-வே பில் , 15ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கும் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் நிர்வாகக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

டீசல் விலையைக் குறைக்க வேண்டும், இ-வே பில் முறையில் சிக்கல்களைத் தீர்த்தல், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முன் எங்களுடன் ஆலோசிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடுத்த 14 நாட்களுக்குள் தீர்த்து வைக்கக் கோரி மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இந்த கோரிக்கைகளை மத்திய அரசு கனிவுடன் அணுக மறுத்தால், அல்லது, பிரச்சினைகளை தீர்க்க சாதகமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், நிர்வாகக்குழு கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கையான வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in