டெல்லி போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து: பெங்களூருவில் பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது

திஷா ரவி
திஷா ரவி
Updated on
1 min read

டெல்லி போராட்டம் தொடர்பாக ட்விட்டரில் டூல்கிட்டை பகிர்ந்தது தொடர்பான வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் திஷா ரவியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இணையதளங்களில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஒரு டூல்கிட், அரசின் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. வேளாண்சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும். எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என மிக நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட் என்பதாகும். அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார்.

5 நாள் போலீஸ் காவல்

இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட திஷா ரவி, போலீஸாரால் நேற்று மாலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது திஷா ரவி மாஜிஸ்திரேட் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார். அவர் நீதிமன்றத்தில் கூறும்போது, “கிரேட்டா தன்பர்க் சமூக வலைதளத்தில் பகிர்ந்த டூல்கிட்டில் நான் 2 வரிகள் மட்டுமே மாற்றி பதிவு செய்தேன். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே அதைச் செய்தேன்" என்று கூறிவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in