

தெலங்கானா மாநிலம் வாரங்கல் இடைத்தேர்தலில் நேற்று 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு நடந்தது.
வாரங்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக தொகுதி முழுவதும் 1,778 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5,550 பேர் தேர் தலுக்காக பணியமர்த்தப்பட்டனர். 5 ஆயிரம் போலீஸாரும், 20 கம் பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டனர். இதனால் காலை முதலே ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்காளர்கள் வாக்குபதிவு செய்த னர். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்த இந்தத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம்-பாஜ கூட்டணி இடையே நான்கு முனை போட்டி நிலவியது. மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.