

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:
உள்நாட்டு தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்பட்ட ‘அட் வான்ஸ்டு ஏர் டிபன்ஸ் (ஏஏடி) ஏவுகணை’ ஒடிசா மாநில கடற்கரையில் அப்துல்கலாம் தீவில் உள்ள ஏவுகணை செலுத்து மையத்திலிருந்து காலை 9.46-க்கு சோதனை முயற்சியாக ஏவப்பட்டது.
அப்போது அந்த ஏவுகணை மின்னணு முறையில் தயாரிக் கப்பட்ட இலக்கை தாக்கிய துடன் அனைத்து எதிர்பார்ப்பு களையும் நிறைவு செய்து வெற்றி பெற்றது.
அதிநவீன கணினி, 7.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை, வான் வெளியில் எதிரி நாட்டு ஏவு கணையை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.