

82 லட்சம் பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 8 மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் 82,63,858 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 2,27,542 பேர், புதுச்சேரியில் 5,510 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 80 லட்சம் பேருக்கு (79,67,647) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
94,160 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 10,411 முன்கள ஊழியர்களுக்குமாக மொத்தம் 4,62,637 பயனாளிகளுக்கு, 10,411 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
82 லட்சம் பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; 8 மாநிலங்களில் 4 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
8 மாநிலங்களில பதிவு செய்த சுமார் 60 சதவீத (59.70%) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த 8 மாநிலங்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த பயனாளிகளில் 10.8 சதவீதத்தினர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.