

சிவசேனாவின் ‘சாம்னா’ நாளிதழின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிர ஆளுநர்பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் மாநில அரசு விமானத்தில் டேராடூன் செல்ல விரும்பினார். ஆனால்இதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை பாஜக ஒரு பிரச்சினையாக்க விரும்புகிறது.
தனிப்பட்ட பயணங்களுக்காக மாநில முதல்வரும் அரசு விமானத்தை பயன்படுத்த முடியாது. எனவே விதிமுறைப்படியே முதல்வர் அலுவலகம் செயல்பட்டுள்ளது.
ஆனால் மாநில அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். யார்ஆணவத்துடன் செயல்படுகிறார்கள் என்பது நாட்டுக்குத் தெரியும்.டெல்லி எல்லைகளில் நடந்துவரும் போராட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தபோதும் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு தயாராக இல்லை. இது ஆணவம் இல்லையா?
மகாராஷ்டிர சட்டமேலவைக்கு மாநில அமைச்சரவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 12 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஆளுநர் இதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசால் ஆளுநர் ஆட்டுவிக்கப்படுகிறார்.
அரசியலமைப்பு சட்டமும் சட்டங்களும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுவிரும்பினால் ஆளுநர் கோஷ்யாரியை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ‘சாம்னா’ இதழில் கூறப்பட்டுள்ளது.