சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் 4 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் 4 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் 4 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 2013 மே 25-ம் தேதி சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர்கள் வி.சி. சுக்லா, நந்தகுமார் படேல் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளையாக அய்து என்ற தீவிர வாத தலைவர் செயல்பட்டார்.

அவர் சுக்மா மாவட்டத்தின் காதிராஸ் வனப்பகுதியில் பதுங் கியிருப்பதாக சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் சிறப்பு அதிர டிப் படை வீரர்கள், மாவட்ட போலீஸார், சி.ஆர்.பி.எப். வீரர் கள் அடங்கிய சிறப்பு படை காதிராஸ் வனப் பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத் தியது.

நாகல்குடா பஹாத் மலைப் பகுதியில் அதிகாலை 5 மணிக்கு நக்ஸல் தீவிரவாதிகள் தங்கியிருந்த முகாமை பாது காப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இதில் 4 பெண் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிர வாதத் தலைவர் அய்து மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். ஆனால் அவரும் அவரது கூட்டாளிகளும் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து 4 பெண் தீவிரவாதிகளின் உடல் கள் மீட்கப்பட்டன. மேலும் துப் பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.19 ஆயிரம் ரொக்கம், வானொலிப்பெட்டி, சீருடை, உணவுப்பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளன.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் தீவிர வாதிகள் மலாங்கீர் பகுதி நக்ஸல் குழுவைச் சேர்ந்த ரமி, சன்னி, மாஸி, பாண்டே என்பது தெரிய வந்துள்ளது. நச்ஸல் தீவிரவாத தலைவர் அய்துவை பாது காப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in