நாளை நான் சென்னையில் இருப்பேன்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

நாளை நான் சென்னையில் இருப்பேன்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
Updated on
1 min read

’நாளை நான் சென்னையில் இருப்பேன்’ என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 14-ம் தேதி) தமிழகம், கேரள மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

சென்னை கடற்கரைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in