Last Updated : 13 Feb, 2021 05:12 PM

 

Published : 13 Feb 2021 05:12 PM
Last Updated : 13 Feb 2021 05:12 PM

ராகுல் காந்தி குறித்து அவதாறு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல்: காங்கிரஸ் எம்.பி. மனு

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டின் அழிவைப் பற்றியே சிந்திக்கிறார், நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுக்கு ஆதரவாக நடக்கிறார் என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியுள்ளார்.

பட்ஜெட் மீதான விவாத்தில் மக்களவையில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் “நாட்டை இழிவுபடுத்துவதும் விதமாகவே பேசி வருகிறார். போலியான கட்டுக்கதைகளை உருவாக்கும் ராகுல் காந்திக்கு, எதிர்க்கட்சிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் அளிக்கும் பதிலைக் கேட்கும் பொறுமை இல்லை.

அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதூறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகள் பற்றியும், தேசத்தின் வளர்ச்சி பற்றி எதிர்மறையாகவே ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்.

காங்கிரஸ் எம்.பி. பிரதாபன்

நாட்டின் அழிவுகாலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை மனிதராக ராகுல் இருப்பாரோ என அச்சமாக இருக்கிறது. நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுடன் காங்கிரஸ் கட்சி சேர்ந்து கொண்டு,பொய்யான கருத்துக்களையும், போலியான கட்டுக்கதைகளையும் கூறி இந்தியாவை இழிவுபடுத்துகிறார்” எனத் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில், “ நாட்டின் அழிவுகாலத்தை பற்றி சிந்திக்கும் மனிதர் என்று நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தி மீது அவதூறு கூறியுள்ளார்.

இந்த மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுடன் தொடர்பு இருக்கிறது என ஆதாரமில்லாமல் பேசியுள்ளார். நாட்டை இழிவுபடுத்துகிறார் ராகுல் காந்தி எனப் பேசியுள்ளார்.

இது சபையின் அப்பட்டமான உரிமை மீறலாகும். நாட்டின் அழிவுசக்தி ராகுல் காந்தி என எந்த அடிப்படையில் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். இதுபோன்ற வார்த்தைகள், நாடாளுமன்றத்தின் உரிமை, பெருமை மீதான தாக்குதல். எதிர்ப்புக் குரல்கள் எழுப்புவோரை பிளவுபடுத்தும் சக்தி, அழிவுசக்தி, தேசவிரோத சக்தி எனப் பட்டம் கொடுப்பதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x