Last Updated : 13 Feb, 2021 12:00 PM

 

Published : 13 Feb 2021 12:00 PM
Last Updated : 13 Feb 2021 12:00 PM

கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிக்குச் செல்ல பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காக் ஏரிப் பகுதிக்கும் செல்ல பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜுவல் ஓரம் தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான நாாடாளுமன்ற நிலைக்குழு செல்ல இருக்கிறது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலைக்குழு வரும் மே மாதம் இறுதியில் அல்லது ஜுன் மாதத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரிக்குச் செல்ல கடந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இருப்பினும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தபின்பு தான் நிலைக்குழு அந்த இடங்களுக்குச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டார்கள், சீனத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 7 மாதங்களாக இரு நாட்டு ராணுவமும் 9 சுற்றுப் பேச்சு நடத்தியுள்ளன. இதையடுத்து, பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியிலிருந்து இரு நாட்டு ராணுவமும் படிப்படியாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், கிழக்கு லடாக் நிலவரம் ஆகியவை குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வியாழக்கிழமை மாநிலங்களவையில் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், ராஜ்நாத் சிங் அறிக்கைக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி அளித்த பேட்டியில் “ இந்திய எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு மத்திய அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. ஃபிங்கர்-4 பாயின்ட் என்பது இந்தியாவின் எல்லை. அங்குவரை நமது எல்லைப்பகுதியாக பயன்படுத்தி வருகிறோம்.

இப்போது நாம் ஃபிங்கர்-4 பாயின்ட் பகுதியிலிருந்து ஃபிங்கர்-3 பாயின்ட் பகுதிக்கு நகர்கிறோம். எதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவி்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x