

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாநகராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் (48). இவரும், இவரது நண்பர்கள் சதீஷ், வாசு ஆகியோரும் நேற்று முன் தினம் நள்ளிரவு வரை காக்கிநாடா மெக்கானிக் ஷெட் பகுதியில் ஒரு இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர். அப்போது கவுன்சிலர் ரமேஷ், தனது நண்பரான சின்னா என்பவரை வரும்படி தொலைபேசியில் அழைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் சின்னா தனது தம்பியுடன் மெக்கானிக் ஷெட்டுக்கு வந்தார். பிறகு, தனது தம்பிக்கு பிறந்தநாள் என்பதால், கேக் வெட்ட வீட்டுக்கு வரும்படி ரமேஷை சின்னா அழைத்தார். இதற்கு ரமேஷ் செல்ல மறுத்து விட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ரமேஷ் கார் சாவியை பிடுங்கிக்கொண்டு அந்த காரை ரமேஷ் மீது பயங்கரமாக மோதினார்.
பின்னர் அங்கிருந்து காரில் சின்னா தப்பி சென்று விட்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார் ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ ஆந்திராவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.