

காங்கிரஸ் கட்சியுடன் இணையலாமா அல்லது கூட்டணி மட்டும் வைத்துக்கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) நிர்வாகிகள் திங்கள்கிழமை கூடுகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெறும் இக்கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், அரசியல் விவகாரக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
“தெலங்கானா கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டால் எனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கத் தயார்” என்று டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்கெனவே அறிவிதிருந்தார்.
நாடாளுமன்றத்தில் தெலங் கானா மசோதா நிறைவேற்றப்பட்ட பின் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து நன்றி கூறினார்.
அப்போது டி.ஆர்.எஸ். எம்.பி. வினோத் குமார் கூறுகையில், “காங்கிரஸுடன் இணைவது அல்லது கூட்டணி அமைப்பது என 2 வாய்ப்புகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
இந்நிலையில் டி.ஆர்.எஸ். எம்எல்ஏ அரவிந்த ரெட்டி மற்றும் இந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை விஜயசாந்தி எம்.பி. ஆகியோர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட்டதை டி.ஆர்.எஸ். தலைவர்கள் விரும்பவில்லை.
இதுகுறித்து டி.ஆர்.எஸ். எம்எல்ஏவும், சந்திரசேகர ராவின் மகனுமாகிய கே.டி. ராமராவ் கூறுகையில், “எங்கள் கட்சியை காங்கிரஸுடன் இணைப் பதா அல்லது கூட்டணி அமைப் பதா என்று நாங்கள் பேசிக்கொண் டிருக்கும்போது, எங்கள் கட்சித் தலைவர்களை அவர்கள் தங்களு டன் இணைப்பது முறையல்ல. எங்களுடன் நட்பு பாராட்ட விரும் பினால் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்பதை காங்கிரஸ் தலைமை உணரவேண்டும்” என்றார்.