

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் 7-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட முக்கிய தலைவர்கள் நினை விடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் வழியாக ஊடுருவிய 10 தீவிரவாதிகள் காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே ஓட்டல், சத்ரபதி சிவாஜி முனையம், யூத சமூகக் கூடம், ஓபராய் டிரிடென்ட் உள்ளிட்ட இடங் களில் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதில், மும்பை தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை காவல் துறை கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, முதுநிலை ஆய்வாளர் விஜய் சலஸ்கர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், 28 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.
நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்ற இத் தாக்குதல் இந்தியாவையே உலுக் கியது. தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல் லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் 2012 நவம்பர் 21-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இத்தாக்குதல் சம்பவத்தின் 7-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, தெற்கு மும்பையிலுள்ள காவல் நினைவிடத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட தலைவர்கள் பலர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய பட்னாவிஸ், “தீவிரவாத தாக்குதலின்போது, மும்பையின் பாதுகாப்புக்காக போராடி, நமக்காக இன்னு யிர் நீத்த தீரமான காவலர் களுக்கு நான் அஞ்சலி செலுத்து கிறேன். அவர்களால் நாம் பெரு மையடைகிறோம். மும்பையின் பாதுகாப்பை மிகக் கடுமையாக்க நாம் முயற்சி செய்வோம். நவீன உபகரணங்களுடன் காவல் படையை அதிகரிப்போம். அது தான் நமது முன்னுரிமை” என்றார். இந்நிகழ்ச்சியில், மும்பை தாக்குலின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
கடல்பிராந்தியத்தில் எவ்வித சவாலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள் ளது என கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர்.கே. தோவன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே, எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்தில், 330 இந்திய கடற் படை மற்றும் கடலோரா காவல் படையினர் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த 6 வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் விழாவில் அட்மிரல் ஆர்.கே. தோவன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மும்பை தாக்குதல் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர் இத்தகவலை தெரிவித்தார்.