

சென்னை, தூத்துக்குடி உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதி காரம் வழங்கும் மசோதா மாநிலங் களவையில் நேற்று நிறைவேற்றப் பட்டது.
குஜராத், ஒடிசா, விசாகப்பட்டினம், மும்பை, மேற்கு வங்கம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கோவா உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட் டது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதா வுக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாயின.
இந்த மசோதா மூலம் 12 துறைமுகங்களும் இனி சுதந்திரமான இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படும். தொழில்முறை நிர்வாகிகள் மூலம் இந்த துறைமுகங்களை நிர்வகிக்கவும் வழியேற்பட்டுள்ளது.
மசோதா குறித்து மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா கூறும் போது, ‘‘துறைமுகங்கள் விரை வாக முடிவுகளை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான துறை முகங்களாக இவற்றை வளர்த் தெடுக்க இயக்குநர் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.