

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் பஞ்சாபில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அது செங்கோட்டை பகுதியில் வன்முறையாக வெடித்தது.
இதுதொடர்பாக நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து தீப் சித்து உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இக்பால் சிங் என்பவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு என போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் கைது செய்யப்பட்டார் என்று டெல்லி போலீஸ் துணை கமிஷனர் (சிறப்புப் பிரிவு)சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.
செங்கோட்டை வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸார் இதுவரை 38 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து 126 பேரைகைது செய்துள்ளனர்.