Last Updated : 05 Nov, 2015 05:16 PM

 

Published : 05 Nov 2015 05:16 PM
Last Updated : 05 Nov 2015 05:16 PM

திரைக் கலைஞர்கள் 24 பேர் தேசிய விருதுகளைத் திருப்பி அளித்து போராட்டம்

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு பாஜக அரசின் மவுனத்தைக் கண்டித்து, திரையுலகைச் சேர்ந்த 24 கலைஞர்கள் தங்கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்தப் புதிய பட்டியல் மூலம், வலுத்து வரும் விருது திருப்பி அளிப்புப் போராட்டத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்துள்ளார்.

சயீத் மிர்சா, குந்தன் ஷா, ஆகிய மூத்த திரை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் விரேந்திர சைனி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர். சகிப்புத் தன்மை உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பி அளிக்கின்றனர்.

பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கு மற்றும் மத்திய அரசு மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாக இவர்களால் முன்வைக்கப்படுகின்றன.

1988-ம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற அருந்ததி ராய் தனது விருதை திருப்பியளிக்கிறார். மேலும் அஜய் ரெய்னா, ஒளிப்பதிவாளர்கள் ரஞ்சன் பாலித் மற்றும் மனோஜ் லோபோ, சமூக செயல்பாட்டாளரும் இயக்குநர்களுமான தபன் போஸ், சஞ்சய் காக், மதுஸ்ரீ தத்தா, பிரதீப் கிரிஷன் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை திரும்பி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை விருதுகளை திருப்பி அளிக்கும் முடிவை டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இவர்கள் அறிவிக்கவுள்ளனர், அப்போது விரிவான காரணங்கள் தெரிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதை திருப்பி அளிக்கும் கலைஞர்கள் பெயர் விவரம்:

அருந்ததி ராய்

சயீத் மிர்சா

குந்தன் ஷா

விரேந்திர சைனி

அஜய் ரெய்னா

ரஞ்சன் பாலித்

மனோஜ் லோபோ

தபன் போஸ்

சஞ்சய் காக்

மதுஸ்ரீ தத்தா

பிரதீப் கிரிஷென்

ஸ்ரீபிரகாஷ்

விவேக் சச்சிதானந்த்

பி.எம்.சதீஷ்

தருண் பாரிதியா

அமிதபா சக்ரவர்த்தி

ரபீக் இலியாஸ்

சுதாகர் ரெட்டி யக்கான்ட்டி

அன்வர் ஜமால்

சுதீர் பல்சானே

மனோஜ் நிதர்வால்

ஐரீன் தார் மாலிக்

சத்ய ராஜ் நாக்பால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x