

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர் பாக அமெரிக்காவின் எப்பிஐ ஆய்வு அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை, பகிரங்கமாக வெளியிட முடியாது என டெல்லி போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் சசி தரூரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க புலனாய்வு நிறுவனம் (எப்பிஐ) சமீபத்தில் தனது அறிக்கையை டெல்லி போலீஸாருக்கு அனுப்பியிருந்தது. அதில் பொலோனியம் என்ற கதிரியக்க வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இல்லை என கூறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், எப்பிஐ-ன் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்யும்வரை, அதில் உள்ள தகவல்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என டெல்லி போலீஸார் திடீரென அறிவித்துள்ளனர்.
இது குறித்து டெல்லி மாநகர காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர் பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது வரை தனது விசாரணை அறிக்கையை சமர்பிக்கவில்லை. இவ்வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த அவர் களின் அறிக்கை மிகவும் அவசிய மானது. அப்படியே அவர்கள் அறிக்கையை ஒப்படைத்தாலும், அதனை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதற்கு சற்று காலம் பிடிக்கும். தவிர, நீதிமன்றத்தில் அந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட, இவ்வழக்கு தொடர்பான சட்ட விவகாரங்களை முழுமையாக படித்து பார்த்த பிறகே முழு தகவலையும் வெளியிட முடியும். அமெரிக்காவின் எப்பிஐ அனுப்பி வைத்த ஆய்வு அறிக்கை, விரைவில் மருத்துவ குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் விசாரணை
இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு புல னாய்வு குழு முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அவரிடம் உண்மை கண் டறியும் சோதனை நடத்த நீதி மன்றத்தின் அனுமதியை கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரி கிறது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக சசி தரூரின் உதவி யாளர் நாராயண் சிங், ஓட்டுநர் பஜ்ரங்கி மற்றும் நெருங்கிய நண்பர் சஞ்ஜய் தேவன் உட்பட ஆறு முக்கிய சாட்சிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.